Perarivalan: ஜாமினில் வெளியே வந்த பேரறிவாளன்

perarivalan-released-bail-after-31-years-only-interim-relief-says-mother
ஜாமினில் வெளியே வந்த பேரறிவாளன்

Perarivalan: ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவந்த பேரறிவாளன் 31 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்போது ஆயுள் தண்டனை கைதியாக இருக்கும் பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவித்து, தனக்கு விடுதலை கொடுக்க வேண்டும் என்று பேரறிவாளன் மனு தாக்கல் செய்தார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று இருக்கும் பேரறிவாளனுக்கு கடந்த 9ம் தேதி ஜாமீன் கிடைத்துள்ளது. இந்த வழக்கில் சிறையில் ஆயுள் தண்டனையோடு இருக்கும் 7 பேரில் முதல் முதலாக இப்போதுதான் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Perarivalan: ஜாமினில் வெளியே வந்த பேரறிவாளன்

1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து 32 ஆண்டுகள் ஆகிறது. உடல்நிலையை கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு பரோல் வழங்கப்பட்டது. அதன்பிறகு 9 முறை பரோல் நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் ஜாமின் வழங்கப்பட்டதும், இன்று காலை புழல் சிறையில் இருந்து அவர் வெளியே வந்தவருக்கு முகமெல்லாம் பூரிப்பு பொங்க செய்தியாளர்களை சந்தித்தார். ‘எல்லாருக்கும் நன்றி..நன்றி’ என்று கூறிவிட்டு 31 ஆண்டுகளில் இத்தனை மீடியாக்களையும் ஒட்டுமொத்தமாய் சந்தித்தபோது திக்குமுக்காடிப்போனார் பேரறிவாளன்.

இதையும் படிங்க: Fight: கணவன்-மனைவி சண்டை ஏன்?

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உட்பட 28 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கியது நீதிமன்றம். 2014ல் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இவர்களின் கருணை மனு அப்போது நிலுவையில் இருந்தது. நீண்ட காலம் கருணை மனு நிலுவையில் இருப்பது அநீதிக்கு சமமானது. இதை சுட்டிக்காட்டி 2014ல் இவரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேரறிவாளன் 2016ல் மனுதாக்கல் செய்து, அதன்பின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்.

இந்த வழக்கு கடந்த 9ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பேரறிவாளனுக்கு ஜாமின் கொடுக்க கூடாது என மத்திய அரசு வாதாடியது. இதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பாக ராகேஷ் திவேதி வைத்த வாதத்தில், இந்த வழக்கில் தண்டனை கைதி ஆயுள் தண்டனை பெற்று இருக்கிறார். சட்டப்படி ஆயுள் தண்டனை பெற்ற கைதிகளை விடுவிக்கும் சக்தி குடியரசுத் தலைவருக்கு கிடையாது . அது மாநில அரசுக்கு மட்டுமே உள்ளது.

ஆயுள் தண்டனை பெற்ற கோட்சே சகோதரர் 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டாரே?. மாநில அரசு கோபால் கோட்சே போல் இல்லாமல் பேரறிவாளன் 32 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்திருக்கிறார். இந்த அதிகாரம் மாநில அரசுக்கு கீழ் வருகிறது. மாநில அரசு இதில் முடிவு எடுக்க முடியும். இதனால் மாநில அரசு நினைத்தால் ஆயுள் தண்டனை கைதிகள் போல இந்த வழக்கிலும் மன்னிப்பு வழங்க முடியும் என்று வாதம் வைத்தனர். இதையடுத்து பேரறிவாளனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

Perarivalan: ஜாமினில் வெளியே வந்த பேரறிவாளன்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை வீட்டில் கடந்த ஒன்பது மாதங்களாக பரோலில் இருந்த பேரறிவாளனுக்கு ஜாமின் கிடைத்ததும், கடந்த 11-ம் தேதி புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது உச்சநீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உத்தரவு சிறை அலுவலகத்திற்கு வரவில்லை என்பதால் மீண்டும் வீட்டுக்குத் திரும்பினார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி ஜாமீன் பெற இன்று காலை பலத்த பாதுகாப்புடன் புழல் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறை நடைமுறைகளை முடித்துவிட்டு, ஜாமினில் வெளியே வந்தார்.

”நீதிக்கான 31 ஆண்டுகால நீண்ட போராட்டத்தில் மிகவும் முக்கியமான காலகட்டம் இது. விடுதலை’ என்ற முழுமை நிலையை எட்ட காலம் இன்னும் கைகூடவில்லை என்ற நிலையில் கிடைத்திருக்கிற இந்த பிணை, ஒரு இடைக்கால நிவாரணம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என் மகன் உட்பட அனைவரும் முழுமையான விடுதலையை பெறுகின்றவரை, உங்கள் அனைவரின் ஆதரவு அவசியமிருக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் போராட்டம் தொடர்கிறது” என்றார்.

Rajiv Gandhi Assassination case: Perarivalan released after 32 years on bail

இதையும் படிங்க: Parliament : நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை