Payani music video : பயனி மியூசிக் வீடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டார்

payani-music-video-released-by-superstar-rajini
பயனி மியூசிக் வீடியோவை ரஜினிகாந்த் வெளியிட்டார்

Payani music video : தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் இந்திய சினிமாவில் அறியப்படும் நடிகராக உள்ளவர் நடிகர் ரஜினிகாந்த்.கிட்டத்தட்ட மூன்று தலைமுறைகளை தாண்டியும் தனது ஸ்டைல் மூலம் ரசிகர்களை தன் வசமாக்கியுள்ளவர்.

இவரது மனைவி பெயர் லதா.மேலும் இவர்களுக்கு ஐஸ்வர்யா,சௌந்தர்யா என இரண்டு மகள்கள் உள்ளனர்.இதில் மூத்த மகள் ஐஸ்வர்யா நடிகர் தனுஷ் அவர்களது மனைவி.இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

சமீபத்தில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தங்கள் பிரிய போவதாக அறிவித்தனர்.இவர்களது பிரிவுகுறித்து சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் வந்த வண்ணம் உள்ளது.தற்போது தனுஷை விட்டு ஐஸ்வர்யா பிரிந்து வந்த, அவர்களின் பிரிவு குறித்து வாய் திறக்காமல் இருந்த ரஜினிகாந்த், தந்போது தனது மகளை பாராட்டி லவ் யூ என்று கூறியுள்ளதால் ஐஸ்வர்யா மகிழ்ச்சியில் உச்சத்தில் இருக்கிறார்.

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் சமீபத்திய மியூசிக் வீடியோ ‘பயனி’ இன்று மாலை 4:44 மணிக்கு வெளியிடப்பட்டது.இந்த பாடலை அவரது தந்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார். அவர் தனது பதிவில், 9 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இயக்கியிருக்கும் என் மகள் ஐஸ்வர்யா இயக்கிய #பயனியின் இசை சிங்கிள் வெளியிடுவதில் மகிழ்ச்சி என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : GATE Result 2022 : கேட் தேர்வு முடிவுகள்

தெலுங்கில் இப்பாடலுக்கு சஞ்சாரி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது இந்த பாடலை சாகர் பாடி உள்ளார். இந்த பாடலை நடிகர் அல்லு அர்ஜூன் வெளியிட்டுள்ளார். இந்தியில் அன்கித் திவாரி பாடியுள்ளார். இணையத்தில் வெளியாகி உள்ள இந்த பாடலுக்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

( Aishwarya rajinikanth Payani music video )