Diesel theft: அரசுப் பேருந்தில் டீசல் திருட்டு

திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு
திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை உயிரிழப்பு

Diesel theft: கோவையில் அரசு பேருந்தில் டீசல் திருடிய ஓட்டுநரை போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கினார். இதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் உள்ள பேருந்துகளில் இருந்து டீசல் திருடிய பெரியசாமி என்ற ஓட்டுனரை போக்குவரத்து கழக அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்ததுடன், அவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்தனர்.

கோவை மாவட்டம் அன்னூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளிலில் அடிக்கடி டீசல் அடிக்கடி அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதனையடுத்து அன்னூர் போக்குவரத்துக் கழக பணிமனையில் நிறுத்தப்படும் பேருந்துகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர். ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து இரவு நேரங்களில் கண்காணித்து வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், டீசல் திருடிய ஓட்டுநரை கையும் களவுமாக பிடித்துள்ளனர்.

Diesel theft: அரசுப் பேருந்தில் டீசல் திருட்டு

நேற்று இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, பணிமனையில் நிறுத்தப்பட்ட அரசு பேருந்துகளின் இருந்து டியூப் மூலம் ஒருவர் டீசலை திருடியிருக்கிறார். அவரை பணிமனையில் இருந்த அதிகாரிகள் கையும் களவுமாக பிடித்தனர். அதன் பின்னரே அவர் அதே பணிமனையில் ஓட்டுனராக பணிபுரிந்து வரும் பெரியசாமி என்பது தெரியவந்தது. பனிமனையில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகளின் டீசல் டேங்கில் இருந்து சுமார் 20 லிட்டர் டீசலை திருடி எடுத்து செல்ல முயன்றபோது பெரியசாமி அதிகாரிகளிடம் சிக்கியுள்ளார்.

இதையடுத்து பெரியசாமியிடமிருந்து 20 லிட்டர் டீசல் மற்றும் டீசல் திருட பயன்படுத்தபட்ட பொருட்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து ஓட்டுநர் பெரியசாமியை பணியிடை நீக்கம் செய்தும் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டனர். அரசு பேருந்து ஓட்டுனரே, அரசு பேருந்துகளில் இருந்து டீசல் திருடிய சம்பவம் போக்குவரத்து ஊழியர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்களிடையேவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Election Results 2022: 4 மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்றும் பாஜக