Orange Alert: தமிழகத்தில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு!

கனமழைக்கு வாய்ப்பு
கனமழைக்கு வாய்ப்பு

Orange Alert: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோடை காலத்திலும் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக சில பகுதிகளில் மழை கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது என முன்னதாக வானிலை மையம் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவலில்,

இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

வரும் 14ஆம் தேதி நீலகிரி, கோயம்பத்தூர், திருப்பூர் , தென்தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், ஏனைய தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதையும் படிங்க: CPI inflation: 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்வு