புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மழைக்கு வாய்ப்பு !

தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை ஓட்டிய பகுதிகளில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று எதிர்பாக்கப்படுகிறது .

மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வால் ஒடிசா, பஞ்சாப், சத்தீஷ்கர், டெல்லி, மேற்கு வங்கம், ஆந்திராவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு நாட்களில் ஒடிசா கடற்கரையில் வங்காள விரிகுடாவில் உருவாகும் இரண்டாவது குறைந்த காற்றழுத்த தாழ்வு இதுவாகும்.மேலும் பலத்த காற்று வீசும் என்பதால் வங்கக்கடல் பகுதியில் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.