தொடர் சரிவில் தங்கம் விலை

தங்கம் விலையானது இன்று சற்று சரிவில் காணப்பட்டாலும், தங்கத்தின் முக்கிய சப்போர்ட் விகிதமான 1800 டாலர்களுக்கு மேலேயே காணப்படுகிறது. இதனால் முதலீட்டாளார்கள் தங்கம் விலையானது அதிகரிக்கவே வாய்ப்புகள் அதிகம் என்றும் நம்புகின்றனர். ஆக தங்கம் விலையானது குறையும்போது வாங்கி வைக்கலாம்.

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையில் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. எனினும் ஆகஸ்ட் மாத கான்டிராக்ட் எக்ஸ்பெய்ரி என்பதால், அக்டோபர் கான்டிராக்டில் தற்போது 10 கிராம் தங்கம் விலையானது கிராமுக்கு 41 ரூபாய் குறைந்து, 47,960 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

இது முந்தைய அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகத் தான் தொடங்கியுள்ளது. முந்தைய அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துக் காட்டியுள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையும் விதமாகவே காணப்படுகிறது.