Omicron: இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு 100- ஐ தாண்டியது

Omicron
Omicron

Omicron: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள ஒமைக்ரான் வைரஸ், அதிவேகமாக உலகமெங்கும் பரவி வருகிறது. இந்த வைரஸ் நமது நாட்டையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த 2-ந் தேதி கர்நாடகத்தில் 2 பேருக்கு பரவியதின் மூலம் நாட்டில் அடியெடுத்து வைத்த ஒமைக்ரான் தொடர்ந்து மராட்டியம், ராஜஸ்தான், குஜராத், டெல்லி, ஆந்திரா, கேரளா, சண்டிகார், தமிழ்நாடு என பரவியது. நேற்று வரையில் நாடு முழுவதும் 82 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமைக்ரான் பாதித்தவர்கள் எண்ணிக்கை 101- ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 32, டெல்லி 22, ராஜஸ்தான் 17, கர்நாடகா மற்றும் தெலுங்கானாவில் தலா 8 பேருக்கும் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மக்கள் அவசியமின்றி பயணிப்பதை தேவையின்றி கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Bhringraj Oil :முடி கருமையாக செழித்து வளர உதவும் கரிசலாங்கண்ணி !

Bhringraj Oil: தலைமுடி அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி இலைகளை தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும், முடி உதிர்தலும் கட்டுப்படும்.

கீரையை சுத்தம் செய்து, நன்றாகக் காய வைத்து பொடி செய்து வைத்துக் கொண்டு, தினம் ஐந்து கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால் உடல் நல்ல நிறத்தை பெறும்.

பெண்களுக்கு கூந்தல் வளர 300 மில்லி தேங்காய் எண்ணெய் அல்லது நல்லெண்ணெயில் 150 மில்லி கரிசலாங்கண்ணிச் சாற்றைக் கலந்து காய்ச்சி கைப் பதம் வந்ததும் வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவி வந்தால் தலைமுடி நன்றாக வளரும்.

கரிசலாங்கண்ணிச் சாற்றைத் தினமும் குளிக்கும் முன்பாக தலையில் தடவி சிறிது நேரம் வைத்திருந்து குளித்து வந்தால் இளமையில் தலை வழுக்கை நீங்கி முடி வளரும் நரையும் மாறும்.

இப்படிப்பட்ட கரிசலாங்கண்ணி எண்ணெயை கிராம புறங்களில் பலர் தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் கரிசலாங்கண்ணி எண்ணெயை வாங்க விரும்பினால் 9791886213 என்ற நம்பருக்கு போன் அல்லது வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

இதையும் படிங்க : Earthquake Hits Indonesia: இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் !