ராமாயணம் பற்றி பேசிய ஒபாமா

முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ‘எ பிராமிஸ்ட் லேண்ட்’ என்ற நினைவுக் குறிப்பு புத்தகத்தை எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் தன்னுடைய கடந்த கால அனுபவங்களை விவரித்துள்ள அவர், தான் இந்தியாவை பார்த்ததில்லை என்றாலும், அந்நாட்டைக் குறித்து பல சிறப்பான சிந்தனைகளைக் கொண்டிருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி, இந்தோனேசியாவில் என்னுடைய குழந்தை பருவம் இந்தியாவில் புராதான நூல்களாக பாவிக்கப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரதக் கதைகளைக் கேட்க செலவிடப்பட்டது. என்னுடன் கல்லூரியில் பயின்ற இந்திய மற்றும் பாகிஸ்தானிய நண்பர்கள் தனக்கு பருப்பு மற்றும் கீமா செய்வது குறித்தும் கற்றுக்கொடுத்தனர். மேலும் என்னை பாலிவுட் படங்களின் ரசிகராகவும் மாற்றினர்களாகவும் என குறிப்பிட்டுள்ளார்.