OPS: இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான்- ஓ. பன்னீர்செல்வம் வாக்குமூலம்

o-panneer-selvam-says-jayalalithaa-selected
ஓ.பன்னீர்செல்வம் இன்று ஆஜர்

OPS: ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஆணையத்தின் முன் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் நேற்று ஆஜரானார். அப்போது சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஜெயலலிதா தொடர்பாக பல்வேறு வாக்குமூலம் அளித்தார்.

இந்த நிலையில் இன்று 2-வது நாளாக ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

  • தஞ்சாவூர், அரவக்குறிச்சி உள்பட மூன்று தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளர்களை தேர்வு செய்தது ஜெயலலிதாதான்.
  • இடைத்தேர்தலுக்கான படிவங்களில் ஜெயலலிதா கைரேகை வைத்தது எனக்குத் தெரியும்.
  • ஜெயலலிதாவுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்பட்டது என்பது எனக்கு தெரியாது.
  • ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அவர் நன்றாக இருப்பதாக சசிகலா என்னிடம் தெரிவித்தார்.
  • சசிகலா கூறியதை சக அமைச்சர்களிடம் மட்டுமே தெரிவித்தேன், பொதுவெளியில் எங்கும் பேசவில்லை.
  • அரசு அலுவல்கள் தொடர்பாக ஜெயலலிதா கூறியதாக சசிகலா எந்த தகவலையும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் வாக்குமூலம் அளித்ததாக தந்தி டி.வி.யில் செய்தி வெளியிடப்பட்டது.

இதையும் படிங்க: gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை