ரேஷன் அட்டைத்தாரர்களுக்கு அரசு முக்கிய அறிவிப்பு!!

ரேசன் பொருட்களின் தரத்தை உறுதி செய்ய குழு அமைப்பு
ரேஷன் கடை

தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் (Pongal) பண்டிகையை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதார்களுக்கும் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 20 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.

பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும் பண்டிகைக் கால சமையலுக்கு தேவையான மஞ்சள்தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை, நெய், முழு கரும்பு ஆகியவை இந்த தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியை கடந்த 4-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமை செயலகத்தில் தொடங்கி வைத்தார். இதையடுத்து ரேஷன் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பொங்கல் தொகுப்பை பெற ரேஷன் கடைகள் முன் மக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்று செல்கின்றனர்.

இந்நிலையில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு 65% பேருக்கு வழங்கப்பட்டுள்ளதால் இன்று முதல் வழக்கமாக வழங்கப்படும் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களோடு பொங்கல் பரிசு தொகுப்பையும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு கிடைப்பது உடன் அத்தியவாசிய பொருட்களையும் மக்கள் பொங்கலுக்கு முன் பெற்றுக் கொள்ளலாம் என்பதால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

இதையும் படிங்க: பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள்..!