தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்களுக்கு அனுமதி !

புகழ்பெற்ற புனேவைச் சேர்ந்த தேசிய பாதுகாப்பு அகாடமி (NDA) மற்றும் கேரளாவை தளமாகக் கொண்ட இந்திய கடற்படை அகாடமி (INA) ஆகியவற்றில் ஆண்களுக்கு இணையாக பெண்களுக்கு சம வாய்ப்பு கோரி வழக்கறிஞர் குஷ் கல்ரா மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் ரிஷிகேஷ் ராய் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் எவ்வித பாலின வேறுபாடும் பார்ப்பது கிடையாது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், பெண்களுக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவது ஏற்றுக்கொள்ளப்படாது. ராணுவம் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும்.

பெண்களின் வேலைவாய்ப்புக்காக திறக்கப்பட்டுள்ள வழிகளில் ஆயுதப்படைகளில் பெண்களுக்கு சம வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆயுதப்படைகளில் சேர ஆண்களுக்கும் பெண்களுக்கும் உள்ளீடுகளின் அடிப்படையில் எந்த அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை.

மேலும் செப்டம்பர் 5இல் நடைபெறும் தேசிய பாதுகாப்பு அகாடமி தேர்வில் பெண்கள் கலந்துகொள்ள இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளார்.