இடைநீக்கத்தை ரத்து செய்ய முடியாது- வெங்கையா நாயுடு

கடந்த நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கண்ணியக் குறைவாக நடந்து கொண்டதாகக் கூறி, எதிர்க்கட்சியைச் சேர்ந்த 12 எம்.பி.,க்களை நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்து மாநிலங்களவை தலைவர் உத்தரவிட்டார்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் 6 பேர் காங்கிரஸ் எம்.பி.க்கள். தலா 2 பேர், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா ஆகிய கட்சிகளை சேர்ந்தவர்கள் தலா ஒருவர், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்தவர்கள்.

மாநிலங்களவை இன்று காலை கூடியதும், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்கள் பிரச்சினை எழுப்பினர். விதி 256-ன் கீழ், 12 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தில் வீதி மீறப்பட்டுள்ளதாக மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே கூறினார். ஆனால் 12 எம்.பி.க்களை இடைநீக்கம் செய்யும் முடிவை திரும்பப் பெற வாய்ப்பில்லை என அவைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இது தொடர்பாக வெங்கையா நாயுடு மேலும் கூறுகையில்,

இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் வருத்தம் தெரிவிக்கவில்லை. எனவே எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முறையீட்டை மட்டும் வைத்துக் கொண்டு நான் பரிசீலிக்க தயாராக இல்லை. ஆதலால் இடைநீக்கம் ரத்து செய்யப்படாது” என்றார்.