South Africa: தென் ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக 341 பேர் உயிரிழப்பு

தென் ஆப்பிரிக்காவில் கனமழை
தென் ஆப்பிரிக்காவில் கனமழை

South Africa: தென் ஆப்பிரிக்காவில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா நாட்டின் டர்பன் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் கனமழை வெளுத்து வாங்கியது.

இதன் காரணமாக அந்த மாகாணத்தின் குவாஹுலு-நடல் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள நிலையில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டு வருகிறது.

வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்டுள்ளனர். அதேவேளை, இந்த வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்துள்ளது. மேலும், பலர் காயமடைந்துள்ளனர். இந்த இயற்கை பேரிடரில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணியை மீட்புக்குழுவினர் துரிதப்படுத்தியுள்ளனர்.

No Power Or Water For Days In Flood-Hit South African City, 341 Dead

இதையும் படிங்க: Chithirai Therodum: மதுரை சித்திரை திருவிழா தேரோட்டம் தொடக்கம்…!