‘ஏசி’ இறக்குமதிக்கு தடை விதித்த மத்திய அரசு!!!

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவித்து வரும் மத்திய அரசு, வெளிநாடுகளில் இருந்து, ‘ஏசி’ இயந்திரங்கள் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்து உள்ளது.

கரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்க, மத்திய அரசு, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.சுயசார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து, ‘ரெப்ரிஜிரிரன்ட்ஸ்’ எனப்படும் குளிரூட்டிகளுடன் வரும், ‘ஸ்பிலிட்’ உள்ளிட்ட ஏ.சி., வகைககளை, இறக்குமதி செய்வதற்கு, மத்திய அரசு நேற்று தடை விதித்துள்ளது.