Nigerian air strike: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, நைஜரில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன.
அதேபோல், கொள்ளை, கொலை,பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் ’பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது.
இந்த அமைப்புகள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், இந்த அமைப்புகள் மீது நைஜீரியா மற்றும் நைஜர் நாடுகள் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நைஜர் நாட்டின் மரடி மாகாணத்தில் ’பண்டிட்ஸ்’ கொள்ளை கும்பல் பதுங்கி இருப்பதாக நைஜீரிய படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, நைஜீரிய விமானப்படை நைஜர் நாட்டிற்குள் நுழைந்து வான்வெளி தாக்குதல் நடத்தியது.
பண்டிட்ஸ் கொள்ளை கும்பல் என நினைத்து பள்ளிக்கூடம் அருகே விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகள் மீது தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த வான்வெளி தாக்குதலில் விளையாடிக்கொண்டிருந்த அப்பாவி குழந்தைகள் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தவறுதலாக நடத்தப்பட்ட இந்த தாக்குதல் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நைஜீரிய அரசு தெரிவித்துள்ளது.
‘Nigerian air strike’ kills seven children in Niger
இதையும் படிங்க: tn news : தமிழக முதல்வர் துபாய் பயணம்



