மூன்றாம் நாடு வழியாக கனடா போகலாம்..!

கனடா அரசாங்கம் சமீபத்திய உலகளாவிய பயண ஆலோசனையில் ஈடுபட்டது. இதன் முடிவாக, இந்தியா-கனடா நேரடி விமானங்களை ஜூலை 21 வரை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு இந்த நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த காலகட்டத்தில் கனடாவுக்கு பறக்க வேண்டிய சூழல் இருக்கும் இந்தியப் பயணிகள் ‘மாற்றுப் பாதை’ வழியாக விமானத்தை முன்பதிவு செய்ய வேண்டும். திருத்தப்பட்ட உத்தியோகபூர்வ பயண ஆலோசனையின்படி, இந்தியாவில் இருந்து பெறப்பட்ட கோவிட்-19 மூலக்கூறு சோதனை அறிக்கையை கனடா ஏற்காது.

எனவே, பயணிகள் கனடாவுக்கான பயணத்தைத் தொடர்வதற்கு முன்பு மற்றொரு ‘மூன்றாம் நாட்டில்’ கொரோனா தொற்று இருக்கிறதா என்று பரிசோதிக்க வேண்டும். இந்த திருத்தியமைக்கப்பட்ட உலகளாவிய பயண ஆலோசனையை, கனேடிய அரசாங்கள் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்காக வழங்கியுள்ளது.

இந்த ஆலோசனையின் படி, இதற்கு முன்னர் கோவிட்-19 தொற்று பரிசோதனையில் பாசிட்டிவ் என்று பாதிப்புள்ளதாக வந்தவர்கள், மற்றும் இந்தியாவில் இருந்து கனடாவுக்கு பயணிக்கும் பயணிகள், அவர்கள் புறப்படுவதற்கு 14 முதல் 90 நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைக்கான ஆதாரத்தை இப்போது வழங்க வேண்டும்.

“இந்தியப் பயணிகள் கனடாவுக்கான பயணத்தைத் தொடருமுன் மூன்றாம் நாட்டில் இந்த பரிசோதனை செய்யப்பட்டதாக ஆதாரம் வேண்டும். இதற்காக, நீங்கள் மூன்றாம் நாட்டில் குறைந்தது 14 நாட்கள் தங்கியிருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. கனேடிய அதிகாரிகளால் அமல்படுத்தப்பட்டுள்ள இந்த இந்த மேம்படுத்தப்பட்ட கோவிட்-19 விதிமுறைகள், வேலை, கல்வி, தொழில் ரீதியாக அல்லது பிற காரணங்களுக்காக கனடாவுக்கு பயணிக்க விரும்பும் இந்திய பயணிகளின் ஏற்கனவே இருக்கும் பிரச்சினைகளுக்கும், கூடுதலாக இடையூறுகளைச் சேர்த்துள்ளன.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளை குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தக்கூடிய நெறிமுறைகயை சில நாடுகள் கொண்டுள்ளன. இது அவர்களின் திட்டமிட்ட கால வரையறைக்கு இடையூறு விளைவிக்கும், மேலும் அவர்களின் செலவுகளையும் அதிகரிக்கும். இருப்பினும், இந்தியாவில் இருந்து பயணிக்கும் பயணிகளுக்கு பயணக் கட்டுப்பாடுகளை விதித்த முதல் நாடு கனடா அல்ல.

இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நுழைவு அல்லது போக்குவரத்தை தடைசெய்த பல நாடுகள் உள்ளன, குறிப்பாக இதற்கு முன்னர் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு, இந்த தடைகள் உள்ளன. பயணத்தின் போது பயணிகள் தொற்று பாதிப்பு இருப்பதாக சோதனையில் தெரிய வந்தால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கலாம் அல்லது அவர்கள் புறப்படும் இடத்திற்கு திருப்பி அனுப்பப்படலாம்.