இந்தியாவில் புதிய வகை கொரோனா கண்டுபிடிப்பு

புதிதாக பரவத் தொடங்கியுள்ள ஏஒய் 4.2(Covid variant AY.4.2) வகை கொரோனா வேகமாக பரவும் தன்மை உடையது என்று ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா தெரிவித்துள்ளார். எனினும் இந்த வகை கொரோனாவால் உயிரிழப்பு குறைவாகவே ஏற்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தியாவில் ஏஒய் 4.2 கொரோனா வகை ( Covid variant AY.4.2) கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 17 பேருக்கு இந்த வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. AY.4.2 என்பது கோவிட்- தொற்று ஏற்பட காரணமான SARS-CoV-2 வைரஸின் டெல்டா மாறுபாட்டின் துணைப் பரம்பரையாகும். அதே சமயம் இந்தியாவில் புழக்கத்தில் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் மாறுபாடாக டெல்டா தொடர்கிறது.

ஏஒய் 4.2 கொரோனாவின் தன்மை குறித்து ஐசிஎம்ஆர் விஞ்ஞானி டாக்டர் சமிரன் பாண்டா நியூஸ்18 ஊடகத்துக்கு அளித்த பேட்டியில், “புதிய டெல்டா வேரியண்ட் மிகவும் பரவக்கூடியதாகத் தெரிகிறது, ஆனால் அது ஆபத்தானது அல்ல. இத்தகைய வைரஸ் தான் வாழ்வதற்காக அதிக மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இருப்பினும், இந்த வகை கொரோனா வீரியம் மிக்கதாக இருக்கும் என்று சொல்வது கடினம்” என்று அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: நடிகர் சிம்பு, டி.ராஜேந்தர் மீது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் கமிஷனர் அலுவலகத்தில் புகார்