இந்தியாவில் புதிதாக 56,211 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. இதனால் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,20,95,855 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,211 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று ஒரே நாளில் 271 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன்மூலம் பலி எண்ணிக்கை 1,62,114 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 1,13,93,021 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 37,028 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 5,40,720 பேர் சிகிச்சையில் உள்ளனர். நாடு முழுவதும் நேற்று வரை 6,11,13,354 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.