Netflix pulls out of Russia: ரஷியாவில் தனது சேவையை நிறுத்தியது நெட்பிளிக்ஸ்

Netflix-pulls-out-of-Russia

Netflix pulls out of Russia: உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது.

ரஷியாவின் தாக்குதலுக்கு உக்ரைன் அரசும் ஈடுகொடுத்து போராடி வருகிறது.

பல நாடுகள் இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் பேசுவார் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இதையும் படிங்க: Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

உக்ரைனில் மீட்கப்பட்ட தமிழக மாணவ, மாணவிகள் 180 போ் டெல்லியிலிருந்து சென்னை வந்துள்ளனர். சென்னை விமான நிலையம் வந்தடைந்த 180 மாணவ மாணவிகளை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்.

இந்நிலையில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால் ரஷியா மீது அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன.

ரஷியாவில் எங்களது சேவையை நிறுத்தியுள்ளோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரஷியாவின் புதிய ‘போலி செய்தி’ சட்டத்தினால் டிக்டோக் செயலி நிறுவனம் தனது நேரடி ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.

Russia-Ukraine conflict: Netflix pulls out of Russia

இதையும் படிங்க: Today petrol diesel rate : இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்