Mount Everest: எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உயிரிழந்த நபர்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உயிரிழந்த நபர்
எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் உயிரிழந்த நபர்

Mount Everest: நேபாளத்தை சேர்ந்த கிமி தெஞ்சி செர்பா என்ற 38 வயது நபர் பலமுறை எவரெஸ்ட் மலை சிகரத்தில் ஏறியுள்ளார். இவர் இந்த முறை ஏறியபோது சிகரத்தின் உச்சத்தில் உயிரிழந்தார். கும்பு பனிசரிவுக்கு பக்கத்தில் கால்பந்து மைதானம் என அழைக்கப்படும் இடத்தில் இவர் உயிரிழந்துள்ளார்.

இவரது உடல் சிகரத்திற்கு கீழே கொண்டுவரப்பட்டுள்ளது. விபத்தில் இவர் உயிரிழக்கவில்லை. உயரமான இடத்திற்கு சென்றதால் ஏற்பட்ட உடல்நலக்கோளாறால் இவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவர் தனது தோல்பையை அணிந்தபடி உட்கார்ந்த நிலையிலேயே உயிரிழந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

உலகில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி உயிரிழப்பவர்களில் மூன்றில் ஒருவர் நேபாள் நாட்டை சேர்ந்தவர்கள்தான் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இத்தகைய அபாயத்தை சந்திப்பதற்கு காரணம் எவரெஸ்டின் உச்சத்தை தொடுபவர்களுக்கு கிடைக்கும் பணம் தான் என கூறப்படுகிறது.

கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எவரெஸ்ட் சிகரம் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா குறைந்துள்ளதால் மீண்டும் சிகரம் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பலர் மலையேற்றத்திற்கு முயற்சி செய்வதாகவும் கூறியிருந்தது.

Nepali Climber Dies On Mount Everest, Was Found In A Sitting Position

இதையும் படிங்க: gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை