Chennai Airport: சென்னைக்கு விமானத்தில் வந்த அரசு பள்ளி மாணவர்கள்

நெல்லை மாவட்ட ஆட்சியர்

Chennai Airport:அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க நெல்லை ஆட்சியர் சென்னைக்கு விமானத்தில் அனுப்பி வைத்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் புதுக்குடி, களக்காடு, ஏர்வாடி ,கல்லணை ,சேரன்மாதேவி, வீரநல்லூர் , முனைஞ்சிப்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர். நீட் , ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டு ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிக்க வேண்டும் என்ற முயற்சியில் அரசு பள்ளி மாணவர்கள் தயாராகி வருகின்றனர்.

இதையும் படிங்க: CM Stalin: மீனவர்களை மீட்க நடவடிக்கை: மந்திரிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்

இந்த சூழலில் நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களை சென்னை ஐஐடி வளாகத்தை சுற்றி பார்க்க விமானத்தில் அனுப்பி வைத்துள்ளார் . மாவட்ட ஆட்சியர் விஷ்ணுவின் முயற்சியினால் முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி ஏற்பாட்டின் பேரில் 21 மாணவ மாணவிகள் சென்னை ஐஐடி வளாகத்தை சுற்றி பார்க்க திருநெல்வேலியில் இருந்து இரண்டு நாள் பயணமாக விமானம் மூலம் சென்னை வந்துள்ளனர்.

இவர்கள் ஐஐடி ,அண்ணா பல்கலைக்கழகம், பிர்லா கோளரங்கம் ஆகியவற்றை சுற்றிப்பார்க்க உள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக ஆசிரியர் பிரபு ரஞ்சித் , ஆசிரியை சியாமளா ஆகியோர் தூத்துக்குடி விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு மாணவ -மாணவிகளை பத்திரமாக அழைத்து வந்துள்ளனர்.

மாணவர்கள் ஐஐடி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை சுற்றி பார்த்தால் மேலும் உத்வேகம் ஏற்படும் என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு செய்துள்ள இந்த செயல் உன்மையில் பாராட்டத்தக்கது.

இதையும் படிங்க: Dayalu Ammal: தயாளு அம்மாள் மருத்துவமனையில் அனுமதி