இன்று மகன்கள் மகள்கள் தினம் கொண்டாடப்படுகிறது !

நம் வாழுகின்ற இந்த வாழ்க்கையில் அணைத்து உறவுகளும் மிக முக்கியம்.அதேபோல் அன்னையர் தினம்,மகளிர் தினம்,என பல தினங்கள் உள்ளன.இன்று மகன்கள் மகள்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி தேசிய மகன்கள் மற்றும் மகள்கள் தின நாளாக 1988 இல் குறிப்பிடப்பட்டுள்ளது..இந்த நாள் பற்றி (பிரிட்டிஷ் கொலம்பியா, கனடா) தினசரி செய்தி கட்டுரை யில் ஆகஸ்ட் 12, 1988 குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த நாளை உருவாக்கியவர் யார் என்று சரியாக தெரியவில்லை.

நமக்கும் நம் குழந்தைகளுக்கும் உள்ள உறவு மிக சிறப்பானது.அவர்கள் நம்மிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் நமக்கு தெரிந்தும் தெரியாமலும்.உங்கள் குழந்தைகளுடன் தனியாக சில மணி நேரம் செலவிடுங்கள்.உங்களுக்கு எவ்வளவு சிறப்பு என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்

அவர்கள் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பதில் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு தெரியப்படுத்துங்கள். அவர்களின் நாளின் நிகழ்வுகளைக் கேட்கும்போது, ​​குடும்பக் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். அவர்களின் கனவுகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

வர்களுக்கு ஏதாவது புதிதாகக் கற்றுக் கொடுங்கள், அல்லது அவர்கள் உங்களுக்கு ஏதாவது கற்பிக்கலாம். நீங்கள் அவர்களுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் மகிழுங்கள் மற்றும் உங்களால் முடிந்தவரை தரமான நேரத்தை செலவிடுங்கள்.