இன்று தேசிய கைத்தறி தினம்

இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது அந்நியத் துணிகளை புறக்கணிக்கும் விதமாக ‘சுதேசி இயக்கம்’ கடந்தாஹ் 1907ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் தேதி தொடங்கப்பட்டது. அதன் நினைவாக கைத்தறி தொழிலின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.

கைத்தறியாடை இந்தியர்களின் பாரம்பரியத்தைக் குறிக்கின்றது. சிறுதொழிலான கைத்தறி நெய்தலில் கிட்டத்தட்ட 43 இலட்சம் மக்கள் ஈடுபடுகின்றனர்.

இது இந்தியாவின் ஊரகப் புறங்களில் அதிக வருமானத்தை தருகிறது. உலகெங்கும் உள்ள ஆடைகளில் கிட்டத்தட்ட 95% கைத்தறி ஆடைகள் இந்தியாவில் தயாரிக்கப்படுகின்றன.