National Farmers’ Day 2021: தேசிய விவசாயிகள் தினம் !

National Farmers' Day 2021: தேசிய விவசாயிகள் தினம் !
தேசிய விவசாயிகள் தினம் !

National Farmers’ Day 2021 : கிசான் திவாஸ் என்றும் அழைக்கப்படும் தேசிய விவசாயிகள் தினம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 23 அன்று கொண்டாடப்படுகிறது. நமது வாழ்வில் விவசாயிகளின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.

இந்தியாவின் ஐந்தாவது பிரதமரான சவுத்ரி சரண் சிங்கின் பிறந்தநாளைக் குறிக்கும் வகையில் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.

இந்திய விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையை மேம்படுத்துவதில் சௌத்ரி சரண் சிங் முக்கியப் பங்காற்றினார். அதனால்தான் அவரது பிறந்தநாளில் விவசாயிகள் தினம் கொண்டாடப்படுகிறது. முதல் கிசான் திவாஸ் 2001 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்டது.

ஜமீன்தாரி ஒழிப்புமுறை சட்டத்தை கொண்டு வந்தார். அதேசமயம் நிலச் சுவான்தார்கள், வட்டிக்கு பணம் வழங்குவோர் மீது கடும் எதிர்ப்புகளையும், கண்டனங்களையும், விமர்சனங்களையும் முன்வைத்தவர் சரண்சிங்.National Farmers’ Day 2021

நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது விவசாயம்.இந்தியாவின் முக்கியமான விவசாய விளைபொருட்களான நெல், கோதுமை, பருப்பு வகைகள் உற்பத்தியில் தன்னிறைவை பெற்று வருகிறது.

கிசான் திவாஸ் இந்தியாவின் வளர்ச்சியில் விவசாயிகள் மற்றும் விவசாயத் துறையின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.

இதையும் படிங்க :Horoscope Today : இன்றைய ராசி பலன் !