Kashi Vishwanath Corridor: காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் மோடி

Kashi Vishwanath Corridor
காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தை திறந்து வைத்தார் மோடி

Kashi Vishwanath Corridor: பிரதமர் மோடி தனது சொந்த தொகுதியான வாரணாசியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நடவடிக்கையாக காசி விஸ்வநாதர் கோவில் வளாக உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 339 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்ட காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

முன்னதாக, உத்தர பிரதேசத்தில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி இன்று விமானம் மூலம் வாரணாசி சென்றடைந்தார். பிரதமரை, உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் வரவேற்றனர். வாரணாசியில் உள்ள கால பைரவர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி, இரண்டு அடுக்கு படகு மூலம் காசிக்கு சென்று கங்கையாற்றில் புனித நீராடினார்.

பின்னர், காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற பிரதமர் மோடி வழிபாடு செய்தார்.

இதையும் படிங்க: TN Assembly session: ஜனவரி 5-ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்