பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பெட்ரோல், மீதான கலால் வரி ரூ.5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ.10-ம் குறைத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. இதனால், பெட்ரோல், டீசல் விலை மீதான வரியை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: தமிழகத்தில் தொடரும் கனமழை