Music director Thaman test covid positive : இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா பாதிப்பு !

Music director Thaman test covid positive : இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா பாதிப்பு
இசையமைப்பாளர் தமனுக்கு கொரோனா பாதிப்பு

Music director Thaman test covid positive : தெலுங்கு சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் தமன்.லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார் மற்றும் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில்,அனைவருக்கும் வணக்கம், தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து தடுப்பூசி போடப்பட்ட போதிலும், லேசான அறிகுறிகளுடன் கோவிட் -19 க்கு நேர்மறை சோதனை செய்தேன். நான் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன் மற்றும் எனது மருத்துவர்களின் ஆலோசனையின் கீழ் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றுகிறேன். என்னுடன் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாடு முழுவதும் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.Music director Thaman test covid positive

பல பிரபலங்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்ட போதிலும், கோவிட்-19 தொற்று இருப்பது உறுதியானது. மகேஷ் பாபுவும் லேசான அறிகுறிகளால் பாதிக்கப்பட்டுள்ளார். சிரஞ்சீவி, ஜூனியர் என்டிஆர் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பல பிரபலங்கள் நட்சத்திரம் விரைவில் குணமடைய வாழ்த்தினார்கள்.

தமிழகத்தில் இன்று 8981 பேருக்கு கொரோனா !

covid cases in tn: கொரோனா தொற்றின் 2 ம் அலை இந்தியாவை வெகுவாக தாக்கியது.இந்த பரவலை தடுக்க அரசு ஊரடங்கை அறிவித்தது.இதன் காரணமாக தொற்று எண்ணிக்கை குறைந்து வந்தது.தற்போது மீண்டும் கொரோனா தொற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் இன்று 8,981 பேருக்குக் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதுவரை கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 27,76,413.ஆக உள்ளது. இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,28,496 .சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை: 4531. இன்று தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 11 பேர் உயிரிழந்தனர்.7 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள்.4 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் ஆவர்.covid cases in tn

இந்நிலையில்,வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது.வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.அதனால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு வழிப்பாட்டு தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தல் வேண்டுமா !