உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் பெரும்பான்மை சமூகம் சிறுபான்மை சமூகத்தை ஒடுக்கும். அதற்கு எந்த நாடும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் இது சாதி, மதம், இனம் என்ற போர்வைக்குள் நடந்து கொண்டிருக்கிறது. வட இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் சிறுபான்மையினரான முஸ்லீம்களை துன்புறுத்துகின்றனர். மாட்டிறைச்சி சாப்பிடுவதற்காக கொலை கூட செய்கிறார்கள். அந்தளவிற்கு அவர்களுக்கு மத வெறி ஊறிப் போய்க் கிடக்கிறது.
இந்தியாவில் இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் சிறுபான்மையினர்களாக உள்ளனர். முன்னமே சொன்னதுபோல பெரும்பான்மை சமூகம் சிறுபான்மையினரை ஒடுக்கும். அதற்கு மதம் எல்லாம் ஒரு பொருட்டல்ல. அதற்கு தனது வலிமையைக் காட்ட வேண்டும் அவ்வளவே. இந்த இரு நாடுகளிலும் இந்துக்கள் கடுமையாக ஒடுக்கப்படுகின்றனர் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கவே முடியாது. வரலாற்றின் எச்சங்களில் நாம் அதனை கண்டுணரலாம். மத மோதல்களை உருவாக்க சிறு தீப்பொறி போதும்.
அது தான் வங்கதேசத்தில் சில நாட்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலியாக ஒரு செய்தியைப் பரப்பியதால் இன்று இந்துக்களும் முஸ்லீம்களும் கொலைவெறியுடன் மோதிக் கொண்டிருக்கிறார்கள். சமீப நாட்களுக்கு முன்னர் வங்கதேசம் முழுவதும் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. கொமிலா என்ற நகரில் நானுவார் தீகி ஏரி அருகே நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்ச்சியில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை இந்துக்கள் சிலர் இழிவுபடுத்தியதாக தகவல் பரவ, இரு மதத்தினருக்கும் மோதல் உருவானது.
இதையும் படிங்க: இலவச பேருந்து பயணத்திற்காக பெண் வேடமணிந்து பயணித்த யூட்டியூப்பர்



