தமிழக ஊரடங்கில் தளர்வுகளின் விபரம் !

தமிழகத்தில் தற்போது இருக்கும் ஊரடங்கு ஜூன் 28ம் தேதி முடிவுக்கு வருகிறது. தமிழக அரசு மேலும் சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 5-ம் தேதி வரை அறிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் இருக்கும் சூழலை குறைத்து வகை 1 ,2 , 3 என மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.வகை 1 – (11 மாவட்டங்கள்) கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள்.

இதில்,தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்க அனுமதி உண்டு. ஹார்ட்வேர், புத்தக கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 வரை இயங்க அனுமதி.

சாலையோர உணவுக் கடைகளில் பார்சல் சேவை மட்டும் காலை 6.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை அனுமதிக்கப்படும்.கட்டுமானப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 9.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

அரசின் அனைத்து அத்தியாவசியத் துறைகள் 100% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இதர அரசு அலுவலகங்கள், 50% பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

இனிப்பு, கார வகைகளை விற்கும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். திரையரங்குகளில் வட்டாட்சியர் அனுமதி பெற்று வாரம் ஒரு நாள் பராபரிப்பி பணிகள் செய்யலாம்.

வகை 2-ல் – (23 மாவட்டங்கள்) அரியலூர், கடலூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், வேலூர் மற்றும் விருதுநகர் மாவட்டங்கள்.

இதில்,பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% திரனில் இயங்கலாம்.

சாலையோர உணவுக் கடைகள், பார்சல் சேவை காலை 6 மணி முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். செல்பெசி மற்றும் அது சார்ந்த கடைகள் காலை 9 முதல் மாலை 7 மணி வரை இயங்கலாம். கட்டுமானப் பணிகளை 50% ஊழியர்களுடன் மேற்கொள்ளலாம்.

வகை 3-ல் (4 மாவட்டங்கள்) சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்.

இதில்,அனைத்து தனியார் நிறுவனங்களும் 100% ஊழியர்களுடன் இயங்கலாம். தீப்பெட்டி தொழிற்சாலைகள் 100% ஊழியர்களுடன் செயல்படலாம். ஜவுளிக் கடைகள் குளிர்சாதன வசதியின்றி காலை 9 மனி முதல் மாலை 7 மணி வரை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்கலாம்.மத வழிபாட்டுத் தலங்கள் செயல்பட அனுமதி.

வணிக வளாகங்கள் காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம். தனியார், பாதுகாப்பு சேவை அலுவலங்கள் இ-பதிவு செய்யாமல் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி மையங்கள், யோகா மையங்கள் 50% நபர்களுடன் இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.