கொரோனா தொற்றின் 2 ம் அலை தமிழகத்தை வெகுவாக தாக்கியது.மேலும் இதன் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கை அறிவித்துள்ளது.
தற்போது பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் நேற்று புதிதாக 1596 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது.சென்னையில் மட்டும் நேற்று 186 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கரோனா தடுப்பூசி போடுவதை திட்டமிட்டு துரிதப்படுத்த வேண்டும்.பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களையும் பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்.



