பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருந்த முகமது அமீர், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனக்கு அதிக அழுத்தத்தையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி வருவதாக கூறி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக இன்று திடீரென அறிவித்தார். தற்போது 28 வயதாகும் முகமது அமீர், பாகிஸ்தான் அணிக்காக 32 டெஸ்ட், 60 ஒருநாள், 50 டி20 போட்டிகளில் விளையாடி 259 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். முன்னதாக, இவர் கடந்தாண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார்.
இதனிடையே, முகமது அமீர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் உறுதி செய்துள்ளது.



