MK Stalin: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

மு.க.ஸ்டாலின் பேச்சு
மு.க.ஸ்டாலின் பேச்சு

MK Stalin: தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமைச்செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமைச்செயலாளர், மருத்துவத்துறை செயலாளர், அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். ஏப்ரல் 27-ம் தேதி மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொள்ளும் நிலையில் நாளை முதல்-அமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதையும் படிங்க: Vijay 66 Update: விஜய் 66 படத்தில் இணையும் பிரபல நடிகர்