அரசியல், திருமண நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் தளர்வு

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1200-க்கும் கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற தீபாவளி பண்டிகையையொட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

குறிப்பாக, அரசியல், சமுதாய மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடத்துவதற்கான தளர்வுகள், திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.

அதேப்போல், பண்டிகை காலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்காத வகையில், அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள முதல்வர் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பான அறிவிப்பு தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும்.

இதையும் படிங்க: தமிழக அரசு ஊழியர்களுக்கு 10 சதவீதம் வரை தீபாவளி போனஸ்