ரேஷன் கடையில் 5 கிலோ சுண்டல் வழங்கிய அமைச்சர்

அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ரேஷன் கடை குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 5 கிலோ விலையில்லா சுண்டல் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.

தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ஐந்து கிலோ விலையில்லா சுண்டல் வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் உடுமலை சட்டப்பேரவைத் தொகுதி கோலார்பட்டி ஊராட்சியில் உள்ள ரேஷன் கடையில் இந்தத் திட்டம் இன்றுமுதல் நடைமுறைக்கு வந்தது.

இந்தத் திட்டத்தை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் வரிசையாக நின்று விலையில்லா சுண்டலைப் பெற்றுச் சென்றனர்.

இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவர்கள், கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.