Coconut Sapling: வீடுகள்தோறும் இலவச தென்னங்கன்று

minister-mrk-paneer-selvam-says-about-free-coconut-sapling
வீடுகள்தோறும் இலவச தென்னங்கன்று

Coconut Sapling: ரூ 300 கோடியில் கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் 2022- 2023 ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறுகையில் மானாவாரி நிலங்களில் உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களை நீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், நிலத்தடி நீர் செறிவூட்டும் அமைப்புகள் ஆகியவற்றை உருவாக்கிடவும் இந்த வேளாண் நிதிநிலை அறிக்கையில் திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தென்னையில் காய்ப்புத் திறனை அதிகரிக்கவும், எண்ணெய்ச் சத்தை உயர்த்தவும், குரும்பை உதிர்வதைக் குறைக்கவும், தென்னை நுண்ணூட்டக் கலவை, பசுந்தாள் உரப் பயிர் விதை, உயிர் உரங்கள், போராக்ஸ் ஆகியவை மானியத்தில் வழங்கிடவும் ஒருங்கிணைந்த முறையில் பூச்சி, நோய் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி, உயிரி பூச்சிக் கொல்லிகள், ஒட்டுண்ணிகள் வழங்கிடவும், தென்னை, மா, முந்திரி போன்ற பல்லாண்டு பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி குறித்த செயல் விளக்கத் திடல்கள் அமைப்பதற்கும் 2022-2023 ஆம் ஆண்டில் ரூ 9 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

கிராமங்களில் இலவசமாக தென்னங்கன்றுகள் ரூ 300 கோடியில் வழங்கப்படும். 7.5 லட்சம் ஏக்கரில் மானாவரி பயிர்களுக்கான சிறப்பு திட்டத்திற்கு 132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்திற்கு 71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நில மேம்பாடு இயக்கத்தின் கீழ் மானாவாரி நில தொகுப்புக்கு 132 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையும் படிங்க: TN Budget 2022: இளைஞர்களுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி