தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதில் மாற்றமில்லை !

கொரோனா தொற்றின் அச்சம் காரணமாக பள்ளிகள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக மூடப்பட்டு மாணவர்களின் நலன் கருதி பள்ளி வகுப்புகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வந்தன.

மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவு செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்தது.கர்நாடகா,பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டன.மேலும் தமிழகத்திலும் செப் 1 முதல் 9 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன.

மேலும் நவம்பர் 1 ம் தேதி தீபாவளி என்றாலும் பள்ளிகளை திறப்பதில் மாற்றமில்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யமொழி தெரிவித்துள்ளார்.

நவம்பர் 4 ம் தேதி தீபாவளி வருவதால் பள்ளிகளை திறக்க மறு பரிசீலனை செய்ய படுமா என்ற கேள்விக்கு இவ்வாறு பதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று 1,578 பேருக்கு கொரோனா பாதிப்பு !