மருத்துவ படிப்பு கவுன்சிலிங் இன்று தொடக்கம்

மருத்துவ படிப்பில், அரசு பள்ளி மாணவர் உள் ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கை, இன்று துவங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த, 951 மாணவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘அழைப்பு கடிதம் தபால் வாயிலாக அனுப்பப்படாது; இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், ‘கவுன்சிலிங் வளாகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைககள் பின்பற்றப்படும்’ என்றும், மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.