Summer Heat: இந்தியாவில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் மாதத்தில் அதிக வெயில்..!

மார்ச் மாதத்தில் அதிக வெயில்

Summer Heat: இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த மார்ச் மாதம் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் குறிப்புகளை கொண்டு வெளியான தகவலில் 1901ம் ஆண்டிற்கு பிறகு கடந்த மார்ச் மாதம் இயல்பை விட வெப்பத்தின் அளவு 1 புள்ளி 86 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்திருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் மழையின் அளவு 71 சதவீதம் குறைந்து 8 புள்ளி 9 மில்லி மீட்டர் அளவுக்கு மட்டுமே பதிவாகி இருந்ததாகவும், கடந்த நூற்றாண்டில் இருந்து 3வது முறையாக மார்ச் மாதத்தில் குறைவான மழை பதிவானதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் சராசரியை விட 1.62 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதில் விளம்பரம் செய்ய விரும்புவோர் ஒன்பது ஒன்பது நான்கு நான்கு ஒன்று எட்டு நான்கு ஐந்து நான்கு ஒன்பது என்ற நம்பரை தொடர்புக்கொள்ளலாம்.

இதையும் படிங்க: Seeman: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு