Manipur election: மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்

manipur-election-2022-phase-1-live-updates-polling-in-38-seats-today
இன்று முதல் கட்ட தேர்தல்

Manipur election: ஐந்து மாநில தேர்தலில் 60 தொகுதிகளை கொண்ட மணிப்பூர் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. அடுத்த கட்ட வாக்குப் பதிவு மார்ச் 5-ந் தேதி நடைபெறுகிறது.

முதல் கட்டமாக இன்று இம்பால் கிழக்கு, இம்பால் மேற்கு, பிஷ்ணுபூர், சுராசந்த்பூர் மற்றும் காங்போக்பி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் உள்ள 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. .

15 பெண்கள் உள்பட மொத்தம் 173 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும்.

கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்ட வாக்காளர்கள் பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை வாக்களிக்க அனுமதிக்கப் படுவார்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

5,80,607 ஆண்கள், 6,28,657 பெண்கள் மற்றும் 175 திருநங்கைகள் என மொத்தம் 12,09,439 வாக்காளர்கள் 1,721 வாக்குச் சாவடிகளில் தங்கள் வாக்குரிமையை இன்று பயன்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று மணிப்பூரின் சர்ச்சந்தப்பூர் மாவட்டத்தில் உள்ள கேங்க் பிமுல் கிராமத்தில் குண்டு வெடித்தால், தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப் பதிவு மையங்களில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்காள்ளப்பட்டுள்ளன.

Manipur election 2022 phase 1: Polling in 38 seats under way

இதையும் படிங்க: Chilli chutney: ரோட்டுக்கடை கார சட்னி ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க