International Womens day: பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்

Manas-Kumar-Sahoo-creates-sand-sculpture-on-International-womens-day
சிறப்பு மணல் சிற்பம்

International Womens day: சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது.பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் சமூகத்தில் பெண்ணடிமைத்தனம் ஒன்று இருந்ததில்லை. அது பெண்களுக்கான அனைத்து உரிமைகளையும் உடைய தாய்வழிச்சமூகமாகவே இருந்தது. மெல்ல மெல்ல நிலவுடமைச்சமூக அமைப்பு உருவெடுத்தது. இதன் விளைவாக ஆண்களுக்கும் – பெண்களுக்கும் இடையில் வேலைப்பிரிவினை தோன்றியது. பெண்கள் வாரிசுகளுக்காகவும், குடும்ப அமைப்பிற்காகவும் மட்டும் என்ற தோற்றம் உருவாக்கப்பட்டது.

18ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நியூயார்க்கில் ஆயிரக்கணக்கான பெண்கள் ரஷ்யா, இத்தாலி, போலந்து போன்ற இடங்களிலிருந்து பணிக்காக குடிபெயர்ந்து வேலை செய்து வந்தனர். மணிக்கணக்கில் வேலை, குறைந்த ஊதியம் அவர்கள் பயன்படுத்தும் ஊசி, நூல் உட்காருவதற்கான நாற்காலி தொடங்கி அனைத்திற்க்கும் வரி கட்ட வேண்டும் என்ற அவல நிலை வேலையில் ஏற்படும் பாதிப்பு, கழிவறையை அதிக நேரம் பயன்படுத்துவதெற்கெல்லாம் அபராதத்தொகை வசூலிக்கப்பட்டது.

International Womens day: பூரி கடற்கரையில் சிறப்பு மணல் சிற்பம்

இந்த நிலையில் பிரபல மணல் சிற்ப கலைஞரான மனாஸ் குமார் சாஹூ சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பூரி கடற்கரையில் ஒரு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார். ‘சார்புகளை உடை’ (Break the bias) என்ற தலைப்பின் கீழ் மனாசும் அவரது குழுவினரும் சேர்ந்து 15 அடி அகலமான மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளனர்.

15 டன் மணலைக் கொண்டு 7 மணி நேரம் வேலை செய்து இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளனர். பெண்கள் குறித்து கூறிய மனாஸ், இந்த தலைமுறையில் பெண்கள் பல்வேறு துறையில் தங்களுடைய திறமையை நிரூபித்துள்ளனர். எந்த துறையிலும் பெண்கள் பின்தங்கவில்லை என்று கூறினார்.

இதையும் படிங்க: Russia-Ukraine Conflict: ரஷியாவின் மூத்த ராணுவ அதிகாரி கொல்லப்பட்டார்