பிறந்தநாள் கொண்டாடும் போது நண்பன் உயிரிழப்பு

பிறந்தநாள் என்றாலே அதனை நமது நண்பர்கள் உடன் தான் அதிகமாக கொண்டாடுவோம் தற்போது இணையதளத்தில் அதுபோன்று ஒரு வீடியோ வைரல் ஆகி கொண்டு வருகிறது.

சாலை அருகில் நண்பனின் பிறந்த நாளைக் கொண்டாட அவரது சில நண்பர்கள் கூடி நின்றபடி இருந்தனர் திடீரென அவரது நண்பன் இருசக்கர வாகனத்தில் இருந்து இறங்கினார்.

உடனே சிறிது நேரத்தில் அனைவரும் சேர்ந்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கொண்டாடினர் மேலும் அந்த கேக்கை அவரது முகத்தில் பூசி பின் அவரை அனைவரும் சேர்ந்து தூக்கி சாலையில் படுக்கவைத்து பிறந்த நளை கொண்டாடினார்.

முகத்தில் தடவிய கேக் காரணமாக அவருக்கு மூச்சு விட முடியாத நிலையில் திடீரென சாலையிலேயே அவர் படுத்திருந்தார் அவரால் நம்ப முடியவில்லை உடனே நண்பர்கள் அனைவரும் தண்ணீரை அவரது மேல் தெளித்து எழுப்ப முயற்சித்தனர்.

இருப்பினும் அவர் எழும்பாத நிலையில் அவரை இருசக்கர வாகனத்தில் நண்பர்கள் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் சிசிடிவி காட்சி பதைபதைக்க வைக்கிறது பிறந்தநாள் கொண்டாடும் அனைவரும் மிகவும் ஜாக்கிரதையுடன் கொண்டாட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.