Mamata Banerjee is amazing playing Chendai Melam: செண்டை மேளம் வாசித்து அசத்திய மம்தா பானர்ஜி

சென்னை: Mamata Banerjee is amazing playing Chendai Melam. சென்னையில் மேற்கு வங்க பொறுப்பு ஆளுநர் இல. கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்தார்.

சென்னையில் மேற்கு வங்க மாநில பொறுப்பு ஆளுநர் இல. கணேசனின் சகோதர் 80 வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னை வந்தார். நேற்று மாலை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள முகாம் அலுவலகத்தில் மம்தா பானர்ஜி சந்தித்து பேசினார் .

இந்த சந்திப்பின் போது ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாகுப், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டிஆர் பாலு, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது ஸ்டாலினுக்கு மம்தா நினைவு பரிசு வழங்கினார். மம்தாவுக்கு சாலை அணிவித்து ஸ்டாலின் மரியாதை செய்தார்.

இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்த மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். பிறகு இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்த பேட்டி அளித்தனர்.

பின்னர் பத்திரிகையாளர்களுக்கு மம்தா அளித்த பேட்டியில், தேர்தல் , அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. மேற்கு வங்கத்திற்கு வர வேண்டும் என அழைப்பு விடுத்தார் எனக்றினார். மம்தா கூறும்போது, ஸ்டாலின் எனது சகோதரரை போன்றவர். குடும்ப நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வந்துள்ள நான், ஸ்டாலினை சந்திக்காமல் எப்படி செல்ல முடியும் . இரண்டு கட்சி தலைவர்கள், அரசியலை தாண்டி வேறு விஷயங்கள் குறித்து பேசலாம். நாங்கள் அரசியல் குறித்து பேசவில்லை எனக் கூறினார்.

இந்த நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் மேற்குவங்க பொறுப்பு ஆளுநர் இல.கணேசனின் அண்ணன் சதாபிஷேக விழா இன்று நடைபெற்று வருகிறது. இந்த விழாவில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

இந்த விழாவில் கலந்துகொள்ள வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி செண்டை மேளம் வாசித்து மகிழ்ந்தார்.