நடிகை பலாத்கார வழக்கு: பிரதீப் குமார் நேரில் ஆஜராக போலீஸ் நோட்டீஸ்

பிரபல மலையாள நடிகை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் சாட்சியை மிரட்டியதாக கூறப்பட்ட புகாரில் நடிகரும், எம்எல்ஏவுமான கணேஷ் குமாரின் உதவியாளர் பிரதீப் குமார் 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் விபின்லாலை மிரட்டியது கேரள ஆளுங்கட்சி எம்எல்ஏவும், நடிகருமான கணேஷ்குமாரின் அலுவலக செயலாளர் பிரதீப் குமார் என தெரியவந்தது. இவர் விபின்லாலை போன் மூலமும், நேரடியாகவும் சென்று மிரட்டியுள்ளார். நடிகர் திலீப்புக்கு ஆதரவாக வாக்குமூலத்தை மாற்றினால் வீடு கட்டுவதற்கு பண உதவி செய்வதாகவும் அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

விபின்லாலை மிரட்டுவதற்காக குற்றாலத்தை சேர்ந்த ரத்தினம் என்பவர் பெயரில் எடுக்கப்பட்ட சிம்கார்டை பிரதீப்குமார் பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக 2 நாட்களுக்குள் நேரில் ஆஜராக கூறி பிரதீப் குமாருக்கு பேக்கல் போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.