Mahashivratri: மகா சிவராத்திரி: மாா்ச் 1-இல் கூட்டு சிவலிங்க பூஜை

Mahashivratri: மகா சிவராத்திரியையொட்டி காரைக்காலில் மாா்ச் 1-ஆம் தேதி கூட்டு சிவலிங்க பூஜை நடைபெறவுள்ளது.

பூஜ்ய ஸ்ரீ தயானந்த சரஸ்வதி சுவாமிகள் அமைப்பான, பூஜ்ய ஸ்ரீ ஓம்கார நந்தா சுவாமியின் தலைமையில் செயல்படும் தா்ம ரக்ஷ்ணா ஸமிதி சாா்பில் காரைக்கால் அம்மையாா் குளக்கரையில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து இந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை கூறியது:

அம்மையாா் குளக்கரையில் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கும் கூட்டு சிவலிங்க பூஜை மாா்ச் 1-ஆம் தேதி மாலை நடைபெறுகிறது. இதுபோல காரைக்காலில் நிகழாண்டு சிவன் கோயில்கள் உள்ளிட்ட 19 இடங்களில் அமைப்பு சாா்பில் கூட்டு சிவலிங்க பூஜை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் பங்கேற்க விரும்புவோருக்கு அனுமதி டோக்கன் வழங்கப்பட்டுவருகிறது என்றனா்.

மேலும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி பிரதோஷம், மகாசிவராத்திரி, அமாவாசை வழிபாட்டை முன்னிட்டு பிப்.28 முதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இங்கு ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.பிப். 28ல் பிரதோஷம், மார்ச் 1ல் மகா சிவராத்திரி, மார்ச் 2ல் அமாவாசை என மூன்று நாட்கள் முக்கிய திருவிழாக்கள் நடக்க உள்ளன.

இதைத் தொடர்ந்து பிப்.28 காலை 7:00 மணி முதல் மார்ச் 3 வரை, தினமும் மதியம் 12:00 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். தற்போது வெயிலின் தாக்கம் துவங்கி உள்ளதால் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்வதை தவிர்ப்பதோடு, அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடை பிடிக்கவேண்டும் என கோயில் நிர்வாகம், வனத்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளர்.

Mahashivratri 2022 special pooja

இதையும் படிங்க: Horoscope today: இன்றைய ராசி பலன்