மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு

கரும்பூஞ்சை தொற்றுக்கு ஆளாகும்போது கண்வலி,கண் வீக்கம், பின்னர் பார்வை இழப்பு ஏற்படுகிறது. சில நோயாளிகளுக்கு மூக்கில் ரத்தம் வருதல், பின்னர் மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழப்பும் நேரிடுகிறது.

இதனிடையே மதுரையில் இதுவரை 50 பேருக்கு கரும்பூஞ்சை பாதிப்பு உறுதி என தகவல் வெளியாகி உள்ளது. ஆண்டுக்கு 10 பேருக்கு ஏற்படும் கரும்பூஞ்சை பாதிப்பு தற்போது வாரம் 10 பேர் என பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதில் சிலருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பிற்கு பின்னர், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. கருப்பு பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது என மதுரை அரவிந்த மருத்துவமனை கண் மருத்துவர் உஷா கிம் தெரிவித்துள்ளார்.