madurai chithirai thiruvizha : பிரசித்தியாக நடைபெற்ற மதுரை சித்திரைத் திருவிழா

madurai chithirai thiruvizha
பிரசித்தியாக நடைபெற்ற மதுரை சித்திரைத் திருவிழா

madurai chithirai thiruvizha : மதுரையில் சித்திரைத் திருவிழா சைவமும், வைணவமும் இணைந்த திருவிழா ஆகும். இரு சமயங்கள் தொடர்புடைய மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் விளங்குகின்றன. சமயங்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் நோக்கத்துடனே மன்னர் திருமலை நாயக்கர் காலத்தில் இரு விழாக்களும் இணைக்கப்பட்டு ஒரே விழாவாக ஆக்கினார்.

வைகை ஆற்றில் அழகருக்கு முடியிறக்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். சிலர் கருப்பசாமி வேடமிட்டு திரிபந்தம் ஏந்தி ஆட்டம் ஆடி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

நேற்றைய தினம் தேரோட்டமும் கோலாகலமாக நடந்தது. சித்திரைத் திருவிழாவின் பெருமையை அதிகரிக்கும் வகையில் சுந்தரராஜப்பெருமாளான கள்ளழகர், கடந்த 14ம் தேதி அழகர் மலையிலிருந்து மதுரையை நோக்கி அதிர்வேட்டு முழங்க ஆர்ப்பாட்டமாகக் கிளம்பினார்.

அழகர் எந்த வண்ண வஸ்திரம் உடுத்தி ஆற்றில் இறங்குகிறாரோ அதற்கேற்ப அந்த வருடத்தில் வளம் இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பச்சைப்பட்டு கட்டி வந்தால் நாடு செழிப்பாக இருக்கும் என்பது நம்பிக்கையாகும்.

இதையும் படிங்க : gold and silver rate : தங்கம் மற்றும் வெள்ளி விலை

திருக்கோயிலின் ஒவ்வொரு திருவிழாவும் தீர்த்தம் எனப்படும் நிறைவுநாளை முடிவுசெய்து, உற்சவம் தொடங்கப்படுகிறது. அவ்வகையில், சித்திரை நட்சத்திரத் தைக் கணக்கிட்டு இந்தத் திருவிழா தொடங்கும்.பன்னிரண்டு நாள்கள் நடை பெறும் விழாவில், பத்தாம் நாள் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக் கல்யாணம் நடைபெறும். திருப்புகழ் மண்டபம் அருகே நடைபெறும் திருக்கல்யாணத்தில் திருப்பரங் குன்றம் சுப்ரமணியரும் பவளக் கனிவாய் பெருமாளும் கலந்து கொள்வது விசேஷ அம்சமாகும்.

( madurai chithirai thiruvizha grand celebration )