Madras IIT : மீண்டும் பரவும் கொரோனா

சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்
சென்னை ஐஐடியில் 3 நாட்களில் 30 பேருக்கு பாசிட்டிவ்

Madras IIT : கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக இந்த உலகம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.மேலும் இந்தியாவிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகமாக இருந்தது.தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பல பேர் உயிரிழந்துள்ளனர்.

தொற்று காரணமாக காரணமாக பள்ளிகள்,கல்லூரிகள் மூடப்பட்டன.தற்போது தொற்று எண்ணிக்கை குறைந்து வருவதால் மீண்டும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு இயங்கிவருகிறது.

ஐஐடி வளாகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் தொற்று கண்டறியப்பட்டது, மேலும் இரண்டு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ஆம் தேதி தொற்று உறுதி செய்யப்பட்டது.

கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு லேசான அறிகுறிகள் உள்ளன. அவர்களின் ஆக்ஸிஜன் அளவு சீராக உள்ளது, எனவே பீதி அடையத் தேவையில்லை. சென்னை ஐஐடி வளாகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தும் வசதி உள்ளது. நாங்கள் வளாகத்தில் பரிசோதனைகளை அதிகரித்துள்ளோம். இதுவரை, 365 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன, அதன் அடிப்படையில் அடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும், என்று ராதாகிருஷ்ணன் கூறினார்.

இதையும் படிங்க : afghanistan : ஆப்கானிஸ்தான் பயங்கர குண்டுவெடிப்பு

மாணவர்கள் மற்றும் பிற வளாகங்களில் வசிப்பவர்கள் கட்டாயமாக முகக்கவசங்களை அணிய வேண்டும், இன்னும் தடுப்பூசி போடவில்லை என்றால் தடுப்பூசி போடவும், உணவைப் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

( students tests covid positive in madras IIT )