Actor Siva Karthikeyan: ‘மிஸ்டர் லோக்கல்’ சம்பள பாக்கி விவகாரம்- சிவகார்த்திகேயனுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

மிஸ்டர் லோக்கல்’ சம்பள பாக்கி விவகாரம்
மிஸ்டர் லோக்கல்’ சம்பள பாக்கி விவகாரம்

Actor Siva Karthikeyan: சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என, நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

‘மிஸ்டர் லோக்கல்’ படத்திற்காக தமக்கு பேசப்பட்ட சம்பளத்தில், நிலுவையில் உள்ள சுமார் 4 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு உத்தரவிடக்கோரி, நடிகர் சிவகார்த்திகேயன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு வழங்க வேண்டிய தொகையை தரும் வரை ஞானவேல் ராஜா படங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எம்.சுந்தர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தரப்பில், ‘மிஸ்டர் லோக்கல்’ படத்தால் தனக்கு 20 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாகவும், விநியோகஸ்தர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட போது, சம்பள பாக்கி 2 கோடியே 40 லட்சம் வழங்க வேண்டாம் எனக் கூறி விட்டு, உண்மை தகவல்களை மறைத்து, சிவகார்த்திகேயன் இந்த வழக்கை தெடர்ந்துள்ளதாகவும், டி.டி.எஸ். தொடர்பாக சிவகார்த்திகேயன் தொடர்ந்த வழக்கு வேறு அமர்வில் நிலுவையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக மூன்று ஆண்டுகள் கழித்து மனுத்தாக்கல் செய்தது ஏன் எனவும், டி.டி.எஸ். விவகாரம் தொடர்பாக ஏற்கனவே ஒரு மனு நிலுவையில் இருக்கும் போது, மற்றொரு மனுதாக்கல் செய்யப்பட்டது ஏன் எனவும், நடிகர் சிவ கார்த்திகேயன் தரப்பிற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி, இரு தரப்பு வாதங்களுக்காக விசாரணையை ஏப்ரல் 13-மிம் தேதிக்கு நீதிபதி எம்.சுந்தர் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: Sekar Babu: திமுக ஆட்சியில் தெய்வங்களும் மகிழ்ச்சியாக உள்ளன – அமைச்சர் சேகர் பாபு