அட கடவுளே..ஒரு உயிரை பெறுவதற்கு இன்னோரு உயிர் பலி !

ஜன்னலில் சிக்கிய திருடன்…!
ஜன்னலில் சிக்கிய திருடன்…!

மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் எனும் பகுதியில் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.அங்கு வசித்து வந்த ஒரு தம்பதிக்கு வெகு நாட்களாக குழந்தை இல்லை.

இதனால் குழந்தை பிறக்க வேண்டிம் என பல கோயில்களுக்குச் சென்று வந்துள்ளனர்.மேலும் அவர்களுடைய நட்பு வட்டாரத்தில் பில்லி சூனியம் வைக்கும் சாமியார் இருந்துள்ளார்.அவரிடம் சென்று தங்கள் குறைகளை கூறி புலம்பியுள்ளனர்.

அதற்கு அவர் குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்றால் நரபலி கொடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.இந்நிலையில், 21ஆம் தேதி குவாலியரில் இறந்த ஒரு பெண்ணின் சடலம் குறித்த அறிவிப்பு காவல் நிலையத்திற்கு கிடைத்துள்ளது .போலீஸார் விசாரணை நடத்தியதில் இறந்தது பாலியல் தொழிலாளி என்பது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அந்த தம்பதியரின் உறவினர் தான் அந்த பெண்ணை ஏமாற்றி அழைத்து வந்து கொலை செய்ததாக தெரிகிறது.

இதையும் படிங்க: மக்கள் கவனத்திற்கு..17 நாட்கள் விடுமுறை !