தமிழகத்தில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு !

கோவாவில் இரவு நேர ஊரடங்கு

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தமிழகத்தில் வேகமாக பரவியது.இதனை தடுக்க தமிழக அரசு ஊரடங்கை பிறப்பித்தது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 28 ம் தேதி வர இருக்கிறது.

இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் ஊரடங்கு குறித்து அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை மேற்கொண்டார்.இந்நிலையில், ஜூலை 5-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் மட்டும் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கோயில்கள், தேவாலயங்களில், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத்தலங்கள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

23 மாவட்டங்களில் பொது போக்குவரத்துக்கு அனுமதி, 50% இருக்கைகளுடன் பொது பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி.